இந்தக் கூழுக்கா இருபத்தெட்டு நாமம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனியே ஓர் இனத்தினை மாத்திரம் முன்னிலைப்படுத்துகின்ற அரசியல் யாப்பு திருத்தங்கள் வருவதென்பது ஆபத்தானது என பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எடுத்த எடுப்பிலேயே தேர்தல் முறையில் மாற்றங்களை கொண்டுவருகின்ற போது சாதகமான சில அம்சங்கள் முற்றிலும் இல்லாமல் செய்யப்பட்டு அதன் மூலம் மிகப்பாதகமான சூழ்நிலை ஏற்பட்டு விடுமா என்பது குறித்து அச்சம் நிலவுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் 9ஆவது பாராளுமன்றத்தின் அங்குரார்ப்பண நிகழ்வின் பின்னர் ஜனாதிபதியுடன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எதேச்சையாக சந்தித்த புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.