இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளது நேரத்தில் மாற்றம்…

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் பிளேஒப் மற்றும் இறுதிப் போட்டிகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐ.பி.எல்.தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பிளே-ஒப் சுற்று ஆட்டங்களில் முதலாவது தகுதி சுற்று மும்பையில் வரும் 22-ம் திகதியும், வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் 23-ம் திகதியும், 2-வது தகுதி சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் 25-ம் திகதியும், இறுதிப் போட்டி மும்பையில் 27-ம் திகதியும் நடக்கிறது.

முதலில் இந்த ஆட்டங்கள் இரவு 8.00 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், தற்போது இந்த ஆட்டங்கள் அனைத்தும் ஒரு மணி நேரம் முன்னதாக இரவு 7.00 மணிக்கு தொடங்கி நடைபெறும் என ஐ.பி.எல்.தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

####