இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன….

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அடுத்த வாரம் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிம்ஸ்ரெக் எனப்படும் வங்காள விரிகுடா விளிம்பு நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு நேபாளத்தில் எதிர்வரும் 30, 31ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

காத்மண்டுவில் நடைபெறும் குறித்த இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.