இந்தியாவிடம் தோற்றது மாலிங்கவின் தலையீட்டாலேயே மேத்யூஸ் தெரிவிப்பு

இலங்கை அணியின் தோல்விக்கு  மொத்த அணியினையும் குற்றம் சொல்லிப் பலனில்லை என
அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார்.

ஆசியக்கிண்ண டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த போட்டியில் இலங்கை- இந்தியா அணிகள் மோதியது.

போட்டியின் இறுதியில் இந்தியா வெற்றிவாகை சூடியது.

தோல்வி குறித்து  ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அணித்தலைவர் மேத்யூஸ் கூறுகையில்;

குறித்த ஆசியக் கிண்ணப் போட்டியில் லசித் மாலிங்க தலைமைப் பொறுப்பை ஏற்ற நிலையில் அவர் ஓய்வில் இருக்கின்ற காரணத்தால் அணித்தலைவராக (மேத்யூஸ்) நான் தெரிவானேன்.

மேலும், உலகக் கிண்ணப் போட்டியிற்கான தெரிவிக்குழுவினை இலங்கை கிரிகெட் வாரியமும் லசித் மாலிங்கவும் சேர்ந்தே தெரிவு செய்தனர். 

வீரர்களின் மீதான நம்பிக்கையின் பேரிலேயே (தெரிவிக்குழு/ மாலிங்க ) வீரர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கலாம். 

எனவும் தெரிவித்துள்ளார்.