இந்தியாவின் விசாகப் பட்டிணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான நேரடி விமான சேவை..

ஸ்ரீ லங்கா விமான சேவையினால் இந்தியாவின் விசாகப் பட்டிணத்துக்கும் கொழும்புக்கும் இடையிலான நேரடி விமான சேவை இம்மாதம் 8ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

வாராந்தம் நான்கு தினங்களுக்கு குறித்த விமான சேவை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பிரவேசிக்கும் பயணிகள் ஹைதராபாத் அல்லது சென்னை விமான நிலையத்தின் ஊடாக கொழும்பு வரவேண்டிய நிலை இருக்கிறது.

இனி விசாகப்பட்டிணத்தில் இருந்தும் நேரடியாக கொழும்புக்கு பிரவேசிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

(rizmira)