இந்தியாவில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு…

உத்தரபிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்தில் அனல்மின் நிலைய கொதிகலன் வெடித்ததில், 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

இதன்போது காயமடைந்த பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் வெளியிடப்பட்டுள்ளது.