(FASTNEWS|COLOMBO) மதுரை உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இந்தியாவில் டிக் டாக் செயலியை கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.
டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரை நீதிமன்றில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை கடந்த 3 ஆம் திகதி டிக் டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், டிக் டாக் செயலியை இந்தியாவில் கூகுள் நிறுவனம் முடக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலியை தரவிறக்கம் செய்ய முடியாத நிலை இருப்பதாக கூறப்படுகிறது. நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு மத்திய அரசு, நீதிமன்ற உத்தரவை பின்பற்றுமாறு கடிதம் அனுப்பியிருந்தது.