(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பாகிஸ்தானில் தீபாவளி தினத்தன்று கறுப்பு தினம் கொண்டாடப்பட்டதை தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிராக புனிதப் போர் புரியுமாறு காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளார்
பாகிஸ்தானில், தீபாவளி திருநாளான கடந்த ஞாயிறன்று, காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் “கறுப்பு தினம்” கொண்டாடப்பட்டது. அதில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் மக்கள் பேரணியில் ஈடுபட்டும், போராட்டம் மேற்கொண்டும் இந்தியாவுக்கு எதிரான தங்களின் கருத்தை வெளிப்படுத்தினர்.
இதை தொடர்ந்து, பத்திரிகையாளர்களை சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், “பயங்கரவாதம் என்ற போர்வையை போர்த்தி, ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் மக்களின் தற்போதைய நிலையை மறைக்க முயல்கிறது இந்திய அரசு. காஷ்மீர் மக்களின் நிலையை மேம்படுத்த எல்லா வகையான முயற்சிகளையும் மேற்கொள்ள தயாராக உள்ளது பாகிஸ்தான்” என்றும் தெரிவித்துள்ளார்.