இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட மீளவும் திசர பெரேரா அணிக்கு..

இந்தியாவுடனான கடைசி டெஸ்ட் போட்டியை தொடர்ந்து நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் இலங்கை நட்சத்திர வீரர் திசர பெரேரா அணிக்கு திரும்பவுள்ளதாக கிரிக்கெட் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா-இலங்கை மோதும் கடைசி டெஸ்ட் 12ம் திகதி தொடங்கவுள்ளது. டெஸ்ட் போட்டியை தொடர்ந்து இரு அணிகளும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதவுள்ளனர்.

இந்நிலையில், ஒருநாள் தொடரில் இந்தியாவுக்கு எதிரான இலங்கை அணியில் நட்சத்திர வீரர் திசர பெரேரா இடம்பெறுவார் என தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 

(rizmira)