இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி…

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்றுள்ளது.

இதன்படி நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி களத்தடுப்பினை தெரிவு செய்து இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

குறித்த போட்டி ஒடிசா மாநில கட்டாக்கில் இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

டெஸ்ட் போட்டி தொடரை ஒன்றுக்கு பூச்சியம் மற்றும் ஒருநாள் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் இழந்த நிலையில், இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட 20க்கு 20 தொடரை எதிர் கொள்கிறது.

இந்திய கிரிக்கட் அணி தலைவர் விராட் கோஹ்லி தற்காலிக ஓய்வு பெற்றுள்ளமை காரணமாக ஒருநாள் தொடரை போன்றே 20க்கு 20 தொடருக்கும் ரோஹித் சர்மா தலைமை தாங்குகிறார்.

இலங்கை அணிக்கு திஸர பெரேரா தலைமை தாங்கவுள்ளார்.

இதேவேளை, இறுதியாக இரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற ஐந்து 20க்கு 20 போட்டிகளில் இந்திய அணி  4 போட்டிகளிலும் இலங்கை அணி ஒரு போட்டியிலும் வெற்றிகளை பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.

இலங்கை அணியில் அதிரடி துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா உட்பட 4 வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை அணித்தலைவர் திசர பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை , இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்ற சிகர் தவான் மற்றும் வேகபந்து வீச்சார் புவனேஸ்வர் குமார் ஆகியோர் இன்றைய போட்டியில் இணைத்துக்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய இருபதுக்கு இருபது போட்டிக்கான இலங்கை குழாம்…

திசர பெரேரா (தலைவர் ) , உபுல் தரங்க , ஏஞ்சலோ மெத்திவ்ஸ்  , குசல் ஜனித் பெரேரா , தனுஸ்க குணதிலக , நிரோஷன் திக்வெல்ல , சதீர சமரவிக்ரம , அசேல குணரத்ன , தசன் சானக , சதுரங்க த சில்வா , சசித் பதிரண , அகில தனஞ்சய , துஷ்மந்த சமீர , விஷ்வ பிரனாந்து மற்றும் நுவன் பிரதீப்.

இன்றைய இருபதுக்கு இருபது போட்டிக்கான இந்திய குழாம்…

ரோஹித் சர்மா (தலைவர்) , லோகேஸ் ராஹுல் , செயாஸ் ஐயர் , மனிஸ் பாண்டே , தினேஷ் கார்த்திக் , மகேந்திர சிங் தோனி , ஹர்திக் பாண்டியா , வொசிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹால் , குல்தீப் யாதவ் , தீபாக் ஹுதா , ஜஸ்பிரிட் பும்ரா , மொஹமட் சிராஜ் , பெசில் தம்பி மற்றும் ஜாதவ் உனாத்கத்.