அரசாங்கம் இந்தியாவுடன் எட்கா உடன்படிக்கையை கைச்சாத்திட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறியதனைத் தொடர்ந்து, இந்தியாவுடன் உடன்படிக்கை கைச்சாத்திட அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முக்கியமான வர்த்தகர்களுடன் நேற்றைய தினம் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார். எட்கா உடன்படிக்கை கைச்சாத்திடுவது குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டுறவு அடிப்படையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகர் ஆர்.பாஸ்கரலிங்கம் உள்ளிட்டவர்கள் விரைவில் இந்தியாவிற்கு விஜயம் செய்து எக்டா உடன்படிக்கை தொடர்பிலான இறுதி நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.