இந்தியாவுடனான தொடரிலிருந்து தென்னாபிரிக்கா அணியின் விக்கெட் பாதுகாவலரும் விலகல்…

இந்தியாவுடனான போட்டியில் தென்னாபிரிக்கா அணியின் விக்கெட் பாதுகாவலரும் உபாதை காரணமாக விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் மற்றம் ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்கா அணியிடம் இந்தியா இழந்தது.

அதனை தொடர்ந்து நடைபெற்ற 2 ஒரு நாள் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து நாளை 3 ஆவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே ஒருநாள் போட்டிகளில் இருந்து தென்னாபிரிக்கா அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் வில்லியர்ஸ் காயம் காரணமாக 4 போட்டிகளில் விலகியுள்ளார்.

அதனை தொடர்ந்து தென்னாபிரிக்கா அணியின் அணித்தலைவர் பிளிஸ்சிஸ் முதலாவது ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடர்ந்து நடைபெறவிருந்த ஒருநாள் போட்டிகளில் விலகியுள்ளார்.

இதனால் தற்போது தென்னாபிரிக்கா அணியின் அணித்தலைவராக மர்க்கிரம் செயற்பட்டு வருகின்றார். இந்நிலையில் தற்போது தென்னாபிரிக்கா அணியின் விக்கெட் பாதுகாவலரான குயின்டன் டி கொக்கும் 2 ஆவது போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார்.

 

#rishma