இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் அரசியலை பொருட்படுத்தாமல் நிச்சயம் நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
இந்தியா–பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டித் தொடரை பொதுவான இடமான இலங்கையில் நடத்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் விளையாட இந்தியாவும், இந்தியாவில் விளையாட பாகிஸ்தானும் விரும்பவில்லை. இதனால் இரு அணிகளும் பொதுவான இடமாக இலங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இரு நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர்களும் சமீபத்தில் துபாயில் நடந்த சந்திப்பின் போது இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் அரசியலுக்கு அப்பாற்பட்டு நிச்சயம் நடத்த வேண்டும் என்று அப்ரிதி விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் அது எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் நடத்தலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானிற்கு வந்து இந்தியா விளையாடினால் தான் மகிழ்ச்சி அடைவேன் என்றும் அப்ரிதி தெரிவித்தார்.
மேலும், “இதுபோன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா பாகிஸ்தானிற்கு வந்து விளையாடினால் அது மிகப்பெரிய சந்தோஷமான விஷயமாக இருக்கும். பாகிஸ்தானை ஆதரியுங்கள் இங்கு விளையாடுங்கள்.”என்றார்.