(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தோனேசியா) – இந்தோனேசியாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அங்கு வைத்தியசாலைகளில் கடும் ஒட்சிசன் தட்டுப்பாடு நிலவுகிறது.
இது குறித்து இந்தோனேசிய ஊடகங்கள்,
“இந்தோனேசியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தீவிரம் அடைந்து வருகிறது.
டெல்டா வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலைகளில் கார் பார்க்கிங்கில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் வைத்தியசாலைகளில் கடும் ஒட்சிசன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உரிய சிகிச்சை கிடைக்காமல் பலியானவர்களின் எண்ணிக்கையும் நாளும் அதிகரித்து வருகிறது.
ஜோஜ்யகார்த்தாவில் உள்ள மருத்துவமனையில் ஒட்சிசன் தட்டுப்பாட்டால் 30 பேர் பலியாகி உள்ளனர். திங்கட்கிழமை மட்டும் 29 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.