பாகிஸ்தானிய கிரிக்கட் வரலாற்றில் முதல் தடவையாக டெஸ்ட் கிரிக்கட் தரவரிசையில் பாகிஸ்தான் அணி முதலிடம் பெற்றுள்ளது.
சில தினங்களுக்கு மாத்திரமே முதலாம் இடத்தில் இருந்த இந்திய அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான நான்காவது போட்டி கைவிடப்பட்ட நிலையில், இரண்டு புள்ளிகள் இழந்து 110 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.
இதன்படி ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை 2:2என்ற கணக்கில் சமப்படுத்திய பாகிஸ்தான், 111 புள்ளிகளைப் பெற்றிருந்த நிலையில், இயல்பாக முதலாம் இடத்துக்கு சென்றுள்ளது.
இலங்கையுடனான டெஸ்ட் தொடரை 3:0 என்ற கணக்கில் இழந்த அவுஸ்திரேலியா, 108 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.
இங்கிலாந்தும் 108 புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தில் உள்ள அதேநேரம், நியுசிலாந்து ஐந்தாம் இடத்தில் இருக்கிறது.
இலங்கை 95 புள்ளிகளுடன் 6ம் இடத்தில் உள்ளது.
தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஸ் மற்றும் சிம்பாப்வே ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.