இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டியில் நடுவர் ஜான் வார்ட் ஹெல்மெட் அணிந்த படி பணியாற்றுகிறார்.
கிரிக்கெட் போட்டிகளில் துடுப்பெடுத்தாடும் வீரர்களும், களத்தடுப்பில் ஈடுபடும் வீரர்கள் மட்டும் ஹெல்மெட் அணிந்து விளையாடி வந்த நிலையில், நடுவர் ஜான் வார்ட் இந்த போட்டியில் ஹெல்மெட் அணிந்தபடி செயல்படுகிறார்.
திண்டுக்கலில் நடந்த ரஞ்சிப் போட்டியின் போது ஜான் வார்ட் நடுவராகப் பணியாற்றினார்.
தமிழ்நாடும், பஞ்சாபும் மோதிய அந்தப் போட்டியில் துடுப்பாட்ட வீரர் அடித்த பந்து ஜான் வார்ட் தலையை பலமாக தாக்கியது. இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்து விட்டார்.
அப்போது அதிர்ஷ்டவசமாக அவருக்கு எதுவும் ஆகவில்லை. இதனால் தான் இன்றையப் போட்டியில் அவர் முன்னெச்சரிக்கையாக ஹெல்மெட் போட்டுக் கொண்டு பணியாற்றுகிறார்.
இந்தியாவில் விஜய் ஹசாரே தொடரில் சமீபத்தில் பெங்களூரில் நடந்த போட்டியின் போது நடுவர் பாஸ்சிம் பதக் ஹெல்மெட் போட்டு பணியாற்றினார். ஆனால் சர்வதேச போட்டியில் நடுவர் ஹெல்மெட் அணிவது இதுதான் முதன்முறையாகும்.