இந்தியா சென்ற ஜெயசூரிய கோஹ்லியினை புகழ்ந்து தள்ளியது இப்படித்தான்… (PHOTOS)

இலங்கை அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான ஜெயசூர்யா அண்மையில் இந்தியா சென்றுள்ளார், அங்கு சென்ற அவரிடம் இந்திய அணி குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர், விராட் கோஹ்லியில் தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

யார் யாருக்கு எப்போது பந்து வீச வரவழைக்க வேண்டும் என்று நன்கு அறிந்து வைத்துள்ளார் என்று புகழாரம் சூட்டினார்.

இந்நிலையில் இந்தியா சென்ற போது தான் எங்கு எல்லாம் சென்றேன் என்பது தொடர்பான புகைப்படங்களை ஜெயசூர்யா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அதுமட்டுமின்றி பீகாரில் உள்ள புத்த கயா கோவிலுக்கு சென்ற அவர் அங்குள்ளவர்களிடம் புகைப்படம் எடுத்துள்ளார்.

அதை அவர் தன்னுடைய வாழ்வில் மிகவும் முக்கியமான நேரம் இது என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து சிறு வயதில் தான் வாங்கிய கோப்பைகளையும் பதிவேற்றம் செய்துள்ளார்.