இந்தியா பயணிகளுக்கு இலங்கை தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவிலிருந்து வருகை தரும் எந்தவொரு பயணிகளுக்கும் இலங்கையில் தரையிறங்க அனுமதியளிக்கப்படமாட்டாது என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொவிட் பரவல் நிலைமையை கவனத்திற் கொண்டு உடன் அமுலாகும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.