இந்தியா பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வருகை

(FASTNEWS|COLOMBO)  இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் அவர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதுடன் இந்திய பிரதமரை வரவேற்பதற்காக ஜனாதிபதி செயலகத்தில் இன்று விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இரண்டு நாட்டு அரச தலைவர்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பின் பின்னர் ஜனாதிபதியினால்,  இந்திய பிரதமருக்கு விசேட மதிய உணவு விருந்துபசாரமொன்றை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற  தாக்குதலின் பின்னர் இலங்கையில் அரச முறை சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் முதலாவது அரச தலைவர் இந்தியப் பிரதமராவார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 3 ஆவது இலங்கை விஜயமாக இந்தப் பயணம் அமைகின்றது.