இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகள் இடையிலான T-20 கிரிக்கெட் தொடர் கொழும்பில் நடைபெறுகிறது.
இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்குள் நுழையும்.
இந்நிலையில் இன்று(08) நடக்கும் 2-வது லீக்கில் இந்திய அணி, பங்களாதேஷை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெற்றால் தான் இறுதிப் போட்டி வாய்ப்பில் சிக்கலின்றி நீடிக்க முடியும் என்பதால் இந்திய வீரர்கள் மிகவும் கவனமுடன் விளையாட வேண்டியது அவசியமாகும்.
####