(FASTNEWS|COLOMBO) – 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 38 ஆவது போட்டி இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 337 ஓட்டங்களை குவித்தது.
338 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி சார்பில் கே.ராகுல் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர்.
எனினும் இந்திய அணி இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 306 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 31 ஓட்டத்தினால் தோல்வியை தழுவியது.