இந்திய கிரிக்கெட் அணிக்கு இலங்கையர்கள் ஆதரவு வழங்கியமையினால் நாட்டிற்கு பாரிய சிக்கலும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்;
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று முன்தினம் இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான சுந்திர கிண்ண இறுதி போட்டி இடம்பெற்றது.
இந்தப் போட்டியில் இலங்கையர்கள் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என ஆதரவு வழங்கியமை தொடர்பில் விமல் வீரவன்ச விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
“… இந்திய அணிக்கு ஆதரவாக எழுப்பப்பட்ட கோஷங்கள் எட்கா உடன்படிக்கைகளுக்கு கைச்சாத்திட பயன்படும். பங்களாதேஷ் அணியில் வீரர்கள் சிலர் தவறாக நடந்து கொண்ட போதிலும், அவர்கள் இலங்கையின் அரசியல் அல்லது பொருளாதார ரீதியில் தலையிடுவதில்லை..” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.