இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 218 ஓட்டங்கள்…

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் தற்போது(27) இடம்பெற்றுவரும் 3 ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 217 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதன்படி, இந்திய அணிக்கு 218 ஓட்டங்கள் வெற்றி இலக்காக குறிக்கப்பட்டுள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் ஏற்கனவே இந்திய அணி இரண்டு போட்டிகளை வெற்றி கொண்டுள்ள நிலையில், இந்த போட்டி இலங்கை அணிக்கு தீர்மானமிக்கதாக மாறியுள்ளது.

(rizmira)