இந்திய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் ஓய்வினை அறிவித்தார்…

இந்திய அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரராக திகழ்ந்த கெளதம் கம்பீர் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இவர், இந்திய அணி 2007-ம் ஆண்டு T-20 உலகக் கோப்பையை வெல்லும்போது 57 ரன்கள் அடித்து முத்திரை பதித்தார். 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்லும் போது 97 ரன்கள் குவித்து முத்திரை பதித்தார்.

இந்நிலையில் நேற்று(04) அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்த ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

37 வயதாகும் கெளதம் கம்பீர் கடந்த 2003-ம் ஆண்டு இந்திய ஒருநாள் அணியில் அறிமுகம் ஆனார். இந்திய அணிக்காக 58 டெஸ்ட், 147 ஒருநாள் மற்றும் 37 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 22 அரைசதம் 9 சதங்களுடன் 4154 ரன்களும், ஒருநாள் போட்டியில் 34 அரைசதம், 11 சதங்களுடன் 5238 ரன்களும், டி20 7 அரைசதங்களுடன் 932 ரன்களும் சேர்த்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.