உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பெற யுவராஜ் சிங், யூசுப் பதான் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
2016ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் டுவென்டி-20 உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறுவதற்காக யுவராஜ் சிங் மற்றும் யூசுப் பதான் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே ஒருநாள் போட்டி தொடரில், நான்கு போட்டியில் 243 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
சமீபகாலமாக சுரேஷ் ரெய்னாவில் துடுப்பாட்டம் சிறப்பாக இல்லாததால் அவர் தொடர்ந்து நீடிப்பதில் சிக்கல் நிலவுகிறது.
இந்நிலையில் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதன் மூலம் அணித் தெரிவாளர்களை கவனத்தை யுவராஜ் சிங் ஈர்க்க முயற்சிப்பதாக பேசப்படுகிறது.
இதற்கிடையே ஆல் ரவுண்டரான யூசுப் பதான், உலகக் கிண்ண டுவென்டி-20 போட்டியில் விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் கூறுகையில், உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறேன், இது தேசிய அணியில் இடம்பெற வழிவகுக்கும்.
தற்போது எனது முழுக்கவனம் முழுவதும் உள்ளூர் போட்டிகளில் திறமையை காட்டி, அணித் தேர்வாளர்களை என்பக்கம் திருப்புவதில் தான் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.