(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய இருபதுக்கு 20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் எம்.எஸ் டோனிக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அணியில் இருந்து எம்.எஸ் டோனி நீக்கப்பட்டமைக்கு அவரின் ரசிகர்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
தென்ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகளை கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 15ஆம் திகதி தர்மசாலாவில் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியில் உபாதை காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்த ஹர்திக் பாண்டியா மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 3 0 என தொடரை கைப்பற்றியதால் அதே அணியை இந்த தொடரில் களம் இறங்குகிறது.
இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. விராட் கோலி (கேப்டன்), 2. ரோகித் சர்மா (துணைக் கேப்டன்), 3. தவான், 4. கேஎல் ராகுல், 5. ஷ்ரேயாஸ் அய்யர், 6. மணிஷ் பாண்டே, 7. ரிஷப் பந்த், 8. ஹர்திக் பாண்டியா, 9. ஜடேஜா, 10. குருணால் பாண்டியா, 11. வாஷிங்டன் சுந்தர், 12. ராகுல் சாஹர், 13. கலீல் அகமது, 14. தீபக் சாஹர், 15. நவ்தீப் சைனி.