இந்திய அரசின் வரவு – செலவுத் திட்டத்தில் இலங்கைக்கு 360 கோடி நிதி..

2018ஆம் ஆண்டிற்கான இந்திய அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டத்தில் சமுத்திரவியல் இராஜதந்திர நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, அண்டை நாடுகளான இலங்கை, மாலைத்தீவுகள், சீஷேலஸ் மற்றும் மொரிஸியஸ் முதலான நாடுகளுக்கு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.

பிராந்தியத்தில் நிலவும் சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிரான இந்தியாவின் ஒரு மூலோபாய நடவடிக்கையாக இது குறிப்படப்படுகிறது.

இதற்கமைய, கடந்த ஆண்டை விட 2 மடங்கு அதிகமாக, அதாவது இலங்கைக்கு 150 கோடி இந்திய ரூபாய்களை (360 கோடி இலங்கை ரூபா) மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் பாகிஸ்தானின் கௌதார் துறைமுக திட்டம் என்பனவற்றின் ஊடாக இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனா தமது இருப்பை விரிவுபடுத்தியுள்ள நிலையில், காங்கேசன்துறை துறைமுக பணியை இந்திய முன்னெடுப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

 

#rishma