இந்திய மற்றும் இலங்கைக்கு இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்துவதற்கு இலங்கையின் கைத்தொழில் மற்றும் வணிகத் துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன், ஒரு வலுவான தூணாக இயங்கி வருவதாக இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்திய ஏற்றுமதி கண்காட்சி -2015 இற்கான கண்காட்சி இன்று(11) வெள்ளிக்கிழமை வைபவரீதியாக கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேலும், கைத்தொழில் மற்றும் வணிகத் துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வு எதிர்வரும் 13 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இன்னும், இந்தியாவின் ஐம்பதிற்கும் மேற்பட்ட முன்னணி கைத்தொழில், விவசாயம், மருந்தகம், கட்டிட நிர்மாணிப்பு, ஆடை தயாரிப்பு மற்றும் தொழில் நுட்பம், சக்தி வளத்துறை சார்ந்த நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் தமது தாயரிப்புக்களை காட்சிபடுத்துகின்றன.
(riz)