இலங்கை அரசு மற்றும்இந்திய நிறுவனம் ஒன்றும் இணைந்து மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை உருவாக்குவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிறுவனத்துடனான கூட்டு செயற்பாடு வெற்றியளிக்கும் பட்சத்தில் திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் இந்தியாவுடன் இணைந்து திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய எதிர்பார்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.