பலாலி விமான நிலையத்தை பொதுப் பாவனைக்காக பயன்படுத்துவது அல்லது பிராந்திய விமான சேவைகளுக்காக பயன்படுத்துவது தொடர்பில் இந்தியா போன்ற நாடுகளின் ஆலோசனைகளை பெற்று இலங்கையின் பிராந்திய விமான சேவைகளை மேற்கொள்வதில் சாதகமான காரணிகளாக அமையும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.
இவ்வாறான நகர்வுகளை தேசிய பாதுகாப்பிற்கு எந்த வகையிலும் அச்சுறுத்தல் இல்லாத வகையிலும் பிராந்திய பாதுகாப்பை பலப்படுத்தும் வகையிலுமே அரசாங்கம் மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமானத்தளமாக பயன்படுத்துவது குறித்து கள ஆய்வை இந்தியா மேற்கோள்வதாக ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தனவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில்;