இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைக்கான புதிய நிர்வாகக் குழு இன்று(24) அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய உயர் நீதிமன்றம் இதற்கான அறிவிப்பை வழங்கவுள்ளது.
லோதா குழுமத்தின் பரிந்துரைகளை அமுலாக்க தவறியதால், கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் லோதா குழுமத்தின் பரிந்துரை அடிப்படையில் புதிதாக தேர்தல் நடத்தப்பட்டு புதிய தலைவர் மற்றும் செயலாளர் தெரிவு செய்யப்படும் வரையில், உயர்நீதிமன்றத்தினால் நியமிக்கப்படும் நிர்வாகக் குழு செயற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, புதிதாக நியமிக்கப்படவுள்ள குழு, ஐ.பி.எல். போட்டிகளையும் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.