இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக மஹேல..?

(FASTGOSSIP | COLOMBO) – இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளதால், புதிய பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து முன்னாள் வீரர்கள் பலர் விண்ணப்பித்து வருகின்ற நிலையில், இலங்கையின் முன்னாள் வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளருமான மஹேல ஜெயவர்தன, இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால், அவர் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என தெரிய வந்துள்ளது.

“Bangalore Mirror” எனும் பத்திரிகையின் அறிக்கையின்படி, தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு சவால் விடக்கூடிய வகையிலான நபருக்கு பற்றாக்குறை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், அவுஸ்திரேலிய முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் டாம் மூடி, நியூசிலாந்தின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன், இந்தியாவின் ராபின் சிங், லால்சந்த் ராஜ்புத் என இதுவரை 2000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதால், அனைத்து பெயர்களையும் மதிப்பீடு செய்ய பி.சி.சி.ஐ அதிக நேரம் எடுக்கக்கூடும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.