இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு உதவிப் பயிற்சியாளராக செயற்பட்ட நுவன் செனவிரத்ன, இந்தியா தேசியக் கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இம்மாதம் 15ம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ள ஆசியக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் முதல் இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள 2019ம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் வரையில் ஒரு வருட காலம் இந்தியா அணியின் உதவிப் பயிற்சியாளராக கடமையாற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.