உலக கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடரின் அட்டவணையில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் எதிர்வரும் 19ஆம் திகதி தர்மசாலாவில் ஒரு போட்டி இடம்பெறவிருந்தது.எனினும் அந்த போட்டி தற்போது, கொல்கட்டாவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காகவே இவ்வாறு மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் சபை மேற்கோற்காட்டி குறிப்பிட்டுள்ளது.
தர்மசாலாவில் இடம்பெறவிருந்த இந்திய – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போட்டியை குழப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மாற்றம் குறித்து சர்வதேச கிரிக்கட் சபை, இந்திய மற்றும் பாகிஸ்தான் தரப்புகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டது என அதன் தலைமை நிறைவேற்று அதிகாரி டேவிட் ரிச்சட்சன் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தர்மசாலாவில் போட்டியை கண்டு களிப்பதற்காக நுழைவுச் சீட்டுக்களை பெற்றவர்கள், அந்த சீட்டுகளுக்கான முழுப் பணத்தை மீளவும் பெறலாம்.
அல்லது அதே சீட்டுடன் கெல்கத்தாவில் இடம்பெறும் போட்டியை கண்டுகளிக்கலாம் எனவும் டேவிட் ரிச்சட்சன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.