இந்திய மண்ணில் இலகுவாக வென்றது இலங்கை அணி..

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை மேற்கொள்ள தீர்மானித்தது.

அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 38.2 ஓவர்கள் நிறைவில் 112 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.

இந்திய அணி சார்பாக மகேந்திர சிங் தோனி 65 ஓட்டங்களைப் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் சுரங்க லக்மால் 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு 113 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இதில் , அதிரடியாக துடுப்பெடுத்தாடிய உபுல் தரங்க 46 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 49 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

ஏஞ்சலோ மேத்யூஸ் 25 ஓட்டங்களையும் மற்றும் நிரோஷன் திக்வெல்ல 26 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று அணியை வெற்றியை நோக்கி இட்டுச் சென்றனர்.

பந்து வீச்சில் , புவனேஸ்வர் குமார் , பும்ரா மற்றும் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கட் வீதம் பெற்றுக் கொண்டனர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக இலங்கை அணியின் சுரங்க லக்மல் தெரிவு செய்யப்பட்டார்.

அதன்படி மூன்று ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.

 

#reeshmmaa..