இலங்கை மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் இன்று(31) முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இரண்டாவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று(30) கொழும்பு வந்துள்ள நிலையில், இன்று(31) இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடனும் இந்திய வெளிவிவகார அமைச்சர் முக்கிய சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.