இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.
இந்து சமுத்திர பாதுகாப்பு மாநாடு எதிர்வரும் 31 ஆம் திகதி இலங்கையில் ஆரம்பமாக உள்ளது . இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கிலேயே வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இலங்கை வரவுள்ளார்.
இலங்கை பிரதமர், சிசெல்ஸின் உப ஜனாதிபதி,, சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளும் நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்
அலரி மாளிகையில் இடம்பெறும் இம்மாநாட்டில் 35 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குகொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.