இலங்கை அணியினை எந்த விதத்திலும் நம்பமுடியாத பயங்கரமான ஓர் அணி என இன்று(12) நடைபெறவுள்ள இலங்கை – பாகிஸ்தான் தீர்மானமிக்க போட்டி குறித்து கருத்துத் தெரிவிக்கையில், பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிகீ ஆதர் தெரிவிக்கிறார்.
“இலங்கை அணி என்பது ஒருவித பயங்கரமான அணியாகும், அவர்கள் இந்தியாவினை தோற்கடித்து மிகப்பெரும் திறமையினை வெளிக்காட்டியிருந்தார்கள். அன்று இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சிறந்ததொரு முன்னோக்குடன் இலங்கை அணி களமிறங்கியது, எமக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதும் அவ்வாறானதொரு அணியுடனேயாகும்…” என தெரிவித்திருந்தார்.