இந்தோனேசியாவில் இன்று(06) 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்கரா மாகாணத்தில் உள்ள தீவுப்பகுதியான லம்போக் பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவலும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.