இந்தோனேசியாவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – 10 பேர் உயிரிழப்பு..

இந்தோனேசியாவில் பிரபல சுற்றலா நகரம் ஒன்றில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தோனேசியாவில் உள்ள லம்பாக் என்ற தீவின் அருகே இன்று காலை திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமத்ராவை ஒட்டியுள்ள லம்பாக் என்ற தீவின் அருகே கடலில் நிலநடுக்க மையம் இருந்தது. கடலுக்கு அடியில் 7 கிலோ மீட்டர் ஆழத்தில் அதன் மையப்புள்ளி அமைந்திருந்தது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக நிலநடுக்கம் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகளும், கட்டிடங்களும் குலுங்கியுள்ளதுடன், மக்கள் தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.