மேற்கு இந்தோனேசியாவில் சுனாமி அலை தாக்கியதில் ஜாவா – சுமத்ரா இடையிலான பகுதியில் கடும் சேதம் ஏற்பட்டு, 62 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் 550-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 430 வீடுகள், 9 ஓட்டல்கள், 10 படகுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அனாக் கிராகட்டாயு என்ற எரிமலை வெடித்ததன் மூலம் இந்த சுனாமி அலை தாக்குதல் ஏற்பட்டிருக்கலாம் என இந்தோனேசிய பேரிடர் தடுப்பு ஏஜென்சி தெரிவித்துள்ளது. சுனாமி ஏற்பட்டதற்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை.