இந்தோனேசியா விமான விபத்தில் 24 பேரின் சடலங்கள் மீட்பு.. – மீட்புப் பணிகள் தொடர்கிறது…

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து 189 பயணிகளுடன் புறப்பட்ட JT610 என்ற லயன் பயணிகள் விமானம் தொழிநுட்பக் கோளாறுகள் காரணமாக விபத்துக்குள்ளானதில்,

இந்நிலையில், விமானத்தில் பயணித்த பயணிகளில் 24 பேரின் சடலங்கள், மேலும் சிலருடைய உடைமைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, விபத்துக்குள்ளான விமானத்தின் பயணிகள் எவரேனும் உயிரோடு இருப்பதற்கான அடையாளங்களோ சாத்தியக்கூறுகளோ இல்லையென மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

JT610 விமானமானது புதிதாக தயாரிக்கப்பட்டு பரீட்சித்த பின்னரே பயணிகளை ஏற்றிச் சென்ற போதிலும், புறப்பட்டு 13 நிமிடத்தில் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடலுக்கடியில் மேற்கொண்டுவரும் மீட்புப்பணிகள்இன்றும்(30) தொடருமென இந்தோனேசிய போக்குவரத்து பாதுகாப்பு அமையத்தின் தலைவர் சயிர்ஜான்டொ தெஜஹ்ஜோனோ மேலும் தெரிவித்துள்ளார்.