இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் பயங்கர நிலநடுக்கம் ஒன்று இன்றையதினம்(02) பதிவாகியுள்ளது.
இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.5 ஆக பதிவாகியுள்ளது. படாங் நகரை மையமாக கொண்டு சுமார் 50 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.56 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், தூங்கி கொண்டிருந்த சில மக்கள் பீதி அடைந்து வீட்டை விட்டு வெளியே வந்தனர்.
இந்நிலநடுக்கத்தின் தாக்கத்தால் சிங்கப்பூரிலும் கட்டிடங்கள் குலுங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.