கடந்த அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிவாரண உதவிகளை தற்போதைய அரசாங்கம் வழங்குவதில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதனால் விவசாயிகள் உள்ளிட்ட சமூகத்தில் உள்ள ஏழைகள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொலன்னறுவை பிரதேச விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.