மிகவும் எளிமையான இரண்டு பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே ஃபேஸ் பேக் தயாரித்து, முகத்தில் தடவி வந்தால், அற்புதமான உடனடி பலனைக் காணலாம். முக்கியமாக இந்த ஃபேஸ் பேக்கிற்கு அரை மணிநேரம் கூட தேவையில்லை. வெறும் 10 நிமிடங்களே போதுமானது.
ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த பாதாம் மற்றும் பால் தான். இந்த பாதாம் ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதோடு, முகம் பொலிவோடும், பிரகாசமாகவும் இருக்கும். இதைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், எதிர்பார்த்த அழகைப் பெறலாம்.
தேவையான பொருட்கள்:
பாதாம் பவுடர் – 1 டீஸ்பூன்
பால் – 2 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு பௌலில் பாதாம் பவுடர் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். ஒருவேளை பாதாம் பவுடர் இல்லாவிட்டால், 4-5 பாதாமை மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளுங்கள். பின் அந்த பொடியில் பால் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
பின்பு அந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, குறைந்தது 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். இறுதியில் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி, துணியால் சருமத்தை உலர்த்துங்கள். இப்படி இந்த மாஸ்க்கை தினமும் பயன்படுத்தி வந்தால், சருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.