இந்த வருடத்தில் 50 புதிய மீன் விற்பைன நிலையங்களை ஸ்தாபிக்க திட்டம்…

2018 ஆம் ஆண்டில் புதிய 50 கடற்றொழில் கூட்டுதாபன மீன் விற்பைன நிலையங்களை ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சு தெரிவிக்கின்றது.

கடந்த வருடத்தில் மீன் உற்பத்தி கணிசமான வளர்ச்சியை அடைந்திருப்பதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த வருடம் ஜனவரியிலிருந்து செப்டெம்பர் வரையான காலப்பகுதிக்குள் 3 இலட்சத்து 35 ஆயிரத்து 750 மெட்ரிக் தொன் மீன் உற்பத்தி இடம்பெற்றுள்ளதாகவும் இது 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது நூற்றுக்கு 1 தசம் 2 வீத வளர்ச்சி என கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டு முழுவதும் நிலவிய சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளமை விசேட அம்சம் என அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் கடந்த வருடத்தில் ஆழ் கடல் மீன்பிடி உற்பத்தியின் மூலம் நூற்றுக்கு 9 தசம் 2 வீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.