70, 80களில் எம்ஜிஆர், சிவாஜி நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியாகி வசூலில் போட்டி போட்டது. அதன்பிறகு ரஜினிகாந்த், கமல், விஜய், அஜீத் படங்கள் ஒரே நாளில் வெளியாகி போட்டியை சந்தித்தது. இது திரையுலகில் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் யார் படம் சூப்பர் என்ற போட்டியை ஏற்படுத்தியது.
ஆனால் கடந்த சில வருடங்களாக பெரிய நடிகர்கள் ஒரே நாளில் படங்கள் வெளியிடுவதற்கு தவிர்த்து ஒரு வாரம் அல்லது 2 வாரம் இடைவெளிவிட்டு வெளியிடுகிறார்கள். வசூல் கணக்கு தவிர தியேட்டர் கிடைக்காத நிலையும் இந்த திடீர் கட்டுப்பாட்டுக்கு காரணமாகவுள்ளது.
கடந்த ஆண்டில் ரஜினி, கமல் நடித்த படங்கள் எதுவும் திரைக்கு வரவில்லை. இந்த வருடத்தில் ஒட்டுமொத்தமாக பெரிய நடிகர்கள் அத்தனை பேரின் படங்களும் வெளிவரும் சூழல் நிலவுகிறதாக கூறப்படுகிறது.
ரஜினி நடிப்பில் 2.0, காலா படங்கள் தயாராகிக்கொண்டிருக்கிறது. கமல் நடித்துள்ள விஸ்வரூபம் 2 ம் பாகம் தயாராகி வருகிறது. விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம். சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் விஸ்வாசம், சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம். விக்ரம் நடிக்கும் ஸ்கெட்ச், துருவநட்சத்திரம் வெளியாக இருக்கிறது.
மேலும், தனுஷ் நடிக்கும் வட சென்னை, எனை நோக்கி பாயும் தோட்டா, கார்த்தி நடிக்க பாண்டிராஜ் இயக்கும் படம், விஷால் நடிக்கும் இரும்புத்திரை, சண்டகோழி 2 ம் பாகம், மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம், ஜெயம் ரவி நடிக்கும் டிக் டிக் டிக், அடேங்க மறு? விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், சூப்பர் டீலக்ஸ், ஜூங்கா.
ஆர்யா நடிக்கும் கஜினிகாந்த், பிரபுதேவா நடிக்கும் குலேபகாவலி, மெர்குரி, யங் மங் சங், சார்லி சாப்ளின் 2, அதர்வா நடிக்கும் இமைக்கா நொடிகள் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. 2017ம் ஆண்டைவிட 2018 ம் ஆண்டு திரையுலகுக்கு வசூலை அள்ளிக்கொட்டும் ஆண்டாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.