கொழும்பு நகரில் 50 ஆயிரம் குடிசை வீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இக் குடிசைகளில் வாழும் மக்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ள நிதி போதாது என அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க நேற்று(24) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது தெரிவித்திருந்தார்.
இதேவேளை 2020ம் ஆண்டாகும் போது அவற்றுள் 25 ஆயிரம் குடிசைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இவ் வருட இறுதிக்குள் 10 ஆயிரம் வீடுகளை அமைத்து கொடுக்கவிருப்பதாகவும் அவர் மேலும் கூறியிருந்தார்.
வடக்கிற்கு, கிழக்கிற்கு, மலையகத்திற்கு, கிராமத்திற்கு வீடுகளை வழங்குவது போன்று கொழும்பு நகரத்திற்கும் வீடுகள் வழங்கப்பட வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்