(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இந்த வாரத்தில் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மசகு எண்ணெய் தொடர்ந்து வழங்கப்படுவதால் சுத்திகரிப்பு பணிகளை எந்த தடங்கலும் இல்லாமல் தொடர முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுத்திகரிப்பு நடவடிக்கைகள் உட்பட செப்டெம்பர் முதல் டிசம்பர் வரையிலான எண்ணெய் தாங்கி சரக்கு திட்டங்கள் குறித்து விவாதிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வணிக மேலாண்மை மற்றும் சுத்திகரிப்பு அதிகாரிகள் இன்று காலை அமைச்சரை சந்தித்தனர்.