முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு இந்த வார இறுதிக்குள் தீர்வு வழங்கப்படவில்லை எனின் சுழற்சி முறையிலான வேலைநிறுத்தத்தை கடுமையாக மேற்கொள்ள உள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய மின்சார உற்பத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மின்சார சிக்கல்களுக்கு உரிய முடிவை அரசு வழங்காததினாலும் இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக குறித்த சங்கத்தினர் மேலும் தெரிவிக்கின்றனர்.